கென்யாவில் மதுப்பழக்கத்தில் ஈடுபட்டதாக 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கென்யாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள் கடந்த மூன்று வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிகள் அனைத்தும் இயங்காததால், பெரும்பாலான பள்ளிச் சிறுவர்கள் கிளப்புகள் மற்றும் மதுபானக்கடைகளில் சுற்றித் திரிந்திருக்கின்றனர்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸார் தலைநகர் நைரோபியில் மட்டும் மதுப்பழக்கத்தில் ஈடுபட்ட 1000-க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்களை கைது செய்தனர்.
No comments:
Post a Comment