Friday, 16 August 2013

தேசிய கொடி ஏற்றுவதில் மேயர்- எம்.எல்.ஏ. மோதல்


மொசூரி(உத்தர்கண்ட் ): உத்தர்கண்ட் மாநிலத்தில் சுதந்திரதின கொடியேற்றுவதில் காங். மேயருக்கும், பா.ஜ. எம்.எல்.ஏ.க்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று சுதந்திர தினத்தையொட்டி உத்தர்கண்ட் மாநிலம் மொசூரி மாவட்டம், காந்திசவுக் பகுதியில் , மொசூரி மாநகராட்சி காங் மேயர் மன்மோகன்சிங் மல்லா, தேசிய கொடியை ஏற்ற முயன்றார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, இடைமறித்து நான் எம்.எல்.ஏ. நான்தான் தேசிய கொடியை ஏற்றுவேன் என மேயரிடம் மல்லுக்கட்டினார், இதற்கு மேயரும் எதிர்ப்பு தகராறு செய்தார். இதில் இவரும் சண்டையிட்டு ஒருவர‌ையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த காட்சி டி.வி.சானல் ஒன்று நேரடியாக படம் பிடித்தது. பொதுநிகழ்ச்சியில் அரசியல்வாதிகள் மோதிக்கொண்டது அங்கு வந்திருந்த பொதுமக்களை எரிச்சல‌டைய வைத்தது.

No comments:

Post a Comment