கொச்சி:திருமணம் முடிந்து, மூன்றாண்டுகளாக, "செக்ஸ்' உறவு வைத்துக் கொள்ளாத கணவரிடம் இருந்து மனைவி பெற்ற விவாகரத்தை, கேரள ஐகோர்ட் உறுதி செய்தது.
கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர், சஞ்ஜன். நான்கு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். சஞ்ஜனின் மனைவி, கணவர் தன்னுடன், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறி, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். இதை எதிர்த்து, அந்த நபர், கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
முஸ்லிம் திருமண சட்டப்படி, கோர்ட்டில் விவாகரத்து பெற்றது செல்லாது எனக் கூறி, மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, பி.டி.ராஜன் தலைமையிலான பெஞ்ச், சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, குடும்ப நல கோர்ட்டின் தீர்ப்பையும் உறுதி செய்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: திருமணத்திற்குப் பின், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், குடும்ப பொறுப்புகளை ஏற்காமல் இருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யலாம் என, முஸ்லிம் திருமணச் சட்டம் தெரிவிக்கிறது. மனைவியின் விருப்பத்திற்குப் பிறகும், செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, குற்றச்செயலாகும். இதனால், அந்த பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, குடும்ப நல கோர்ட் கொடுத்த தீர்ப்பை, உறுதி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்த
No comments:
Post a Comment