Monday, 22 April 2013

ஆம்புலன்ஸ் டிரைவரைகாப்பாற்றிய நோயாளி

பாரிஸ், ஏப்:மாரடைப்பால் துடித்த ஆம்புலன்ஸ் டிரைவரை, அந்த வாகனத்தில் பயணித்த புற்றுநோயாளி காப்பாற்றியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது பெர்க் சர் மெர். இப்பகுதியை சேர்ந்த புற்றுநோயாளி கிறிஸ்டியன் நயத், 60. புற்றுநோய் முற்றி விட்டதால், கடந்த வாரம், லென்ஸ் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நயத், ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

திடீரென ஆம்புலன்ஸ் ஓட்டுனர், மார்பு வலியால் துடித்தார். இதை கண்ட புற்று நோயாளியான நயத், வண்டியை ஓரம் நிறுத்த சொல்லி, ஓட்டுனரிடமிருந்து வாகனத்தின் சாவியை பெற்று, ஆம்புலன்ஸ்சை ஓட்டி கொண்டு, லில்லி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்த்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். "புற்றுநோயாளி நயத் மட்டும், ஆம்புலன்சை ஓட்டி வந்திருக்காவிட்டால், ஓட்டுனர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை' என, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment