புதுடில்லி : டில்லியில், தொழிலதிபரிடம் இருந்து, 60 லட்சம் ரூபாயை திருடிய, இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். டில்லியை சேர்ந்த தொழிலதிபர் மிருதுல் ஜெயின். காஜியாபாத் பகுதியில், காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரை வழிமறித்து, கார் டயர் பஞ்சராகியுள்ளதாகவும், ஆயில் கசிவதாகவும் தெரிவித்தனர். இதனால், டிரைவரும், மிருதுலும் காரை விட்டு கீழே இறங்கினர். அப்போது அக்கும்பல், காரில் இருந்த, 60 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றது. இது குறித்து போலீசில் புகார் செய்தார் மிருதுல். போலீசார் விசாரணை நடத்தி, இரு சிறுவர்களைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து, திருடப்பட்ட, 60 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். சிறுவர்கள், ஒரு பெரிய மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், டில்லியின் பல பகுதிகளில், இது போல், தந்திரமாக செயல்பட்டு, பணம் மற்றும் நகைகளை திருடியுள்ளதாக, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Tuesday, 7 May 2013
60 லட்சம் ரூபாயை திருடிய சிறுவர்கள்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment