மேற்கு சீனாவின் க்சின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் அய்ம்தி அஹெம்தி(70). இவரும் அதே பகுதியை சேர்ந்த அஸதிஹன் சவுதி(113) என்ற பெண்ணும் (பேரிளம் பெண் என்பதே, பொருத்தமானது) கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் சந்தித்துக் கொண்டனர்.
’அண்ணலும் நோக்க.., அவளும் நோக்க, உண்ணவும் நிலைபெறாது- உணர்வும் ஒன்றிட’ காதல்வயப்பட்ட இந்த இருவரும், அந்த முதல் நாள் சந்திப்பில் இருந்தே சேர்ந்து வாழ தொடங்கி விட்டனர். தன்னை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக் கொள்ளும்படி அய்ம்தி அஹெம்தி வற்புறுத்திய போது, இந்த வயதில் திருமணமா? என்ற வெட்கமும் நாணமும் தன்னை பிடுங்கித் தின்றதால், ஆரம்பத்தில் அஸதிஹன் சவுதி ஒப்புக் கொள்ளவில்லை.
தொடர்ந்து 6 மாதங்களாக மணமகன் வற்புறுத்தியதன் பேரில், ‘போனால் போகட்டும்’ என்று மணமகள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து, பாரம்பரிய முறைப்படி இந்த காதலர்களின் திருமணச் சடங்கு நடந்தேறியது.
உங்களை விட 43 இளையவரை திருமணம் செய்து கொண்டீர்களே? என்று கேட்ட பத்திரிக்கையாளர்களை, எரித்து விடுவது போல் ‘ஒரு பார்வை’ பார்த்த அஸதிஹன் சவுதி, பதில் ஏதும் கூற மறுத்து விட்டார்.
இதே கேள்வியை சற்று மாற்றி, அய்ம்தி அஹெம்தியிடம் கேட்டபோது, ‘என் கண்களுக்கு அஸதிஹன் சவுதி அதிக வயதானவர் போல் தோன்றவில்லை. நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கிறோம்’ என்று கூறினார்.
உங்கள் மனைவியிடம் மிகவும் பிடித்த விஷயம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘என்னை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொள்கிறார். சாப்பாட்டில் அவருக்கு வைக்கும் இரைச்சியை எல்லாம் எனக்கே தந்து விடுகிறார் (பல் கொட்டி விட்டதாலா..?) என்று பூரிப்புடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment