
அமெரிக்காவின் ஹார்வார்ட் நூலகத்தில் உள்ள ஒரு புத்தகதை ‘பைண்டிங்’ செய்வதற்கு பெண்ணின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அங்குள்ள 3 புத்தகங்களின் மேல் அட்டை தோலினால் ஆனது என்று சந்தேகித்த அதிகரிகள் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பியதில், அவற்றில் இரண்டு புத்தகங்கள் ஆட்டுத் தோலினாலும், ஒரு புத்தகம் மனிதத் தோல் குறிப்பாக பெண்ணின் தோலினாலும் ‘பைண்டிங்’ செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.
மனித ஆன்மாவை வசப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார். அந்த புத்தகத்தின் அட்டைக்கு மேலுறையாக மாரடைப்பால் மரணம் அடைந்த அடையாளம் தெரியாத ஒரு மனநோயாளி பெண்ணின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தோலின் ரோமக் கால்களை மிக துல்லியமாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஒரு வேளை இந்த புத்தகம் மனித ஆன்மா சம்பந்தப்பட்டது என்பதற்காக மேல் அட்டையாக மனிதத் தோலை பயன்படுத்தி இருபார்களோ..?’ என்று கருதுகின்றனர்.
No comments:
Post a Comment