Saturday, 31 May 2014

குழந்தையை கொன்ற சிறுவன்: விளையாட்டில் நேர்ந்த விபரீதம்




அமெரிக்காவில் 3 வயது சிறுவன் தன் சகோதரனை எதிர்பாரதவிதமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருக்கும் 18 மாத குழந்தையுடன் அதன் அண்ணணான 3 வயது சிறுவன் துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அவன் எதிர்பாரவிதமாக துப்பாக்கியை கொண்டு சுட்டதால், அவனது சகோதரன் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், குழந்தையின் உடலை கைப்பற்றியதுடன், துப்பாக்கியை குழந்தைகளுக்கு எட்டும் விதத்தில் கவனக்குறைவாக வைத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment