அமெரிக்காவில் சகோதரர்களுக்கிடையே ஆடைகள் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் ப்லோரிடா மாநிலத்தில், ஸ்டன்லி பிலான்க் (16), ஸ்டீபன் ஓடியஸ் (14) ஆகிய சகோதரர்களுக்கு இடையே ஆடைகள் பகிர்ந்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில், ஸ்டீபன் தனது சகோதரனை சுட்டு கொலை செய்துவிட்டு பின்னர் தானும் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ளான்.
இவர்களின் 18 வயது சகோதரர் மார்க் பிலான்க் முதலில் சண்டையை பிரித்து விட்டுள்ளார், ஆனால் மீண்டும் இவர்கள் சண்டையிட்டுக் கொண்டதால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து மார்க் பிலான்க் கூறுகையில், தனது கண் முன்னே இந்த சம்பவம் நடந்ததாகவும், இந்த சண்டை தினமும் வருவது போல தான் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது தம்பியை துப்பாக்கியுடன் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், அவர் பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment