இங்கிலாந்தில் கைப்பேசி சார்ஜர் தீ பிடித்து எரிந்ததில் ஒரு குடும்பமே தீக்கிரையாகியுள்ளது.
இங்கிலாந்தின் யார்க்ஷயர் நகரில் உள்ள வீட்டில் கைப்பேசி சார்ஜர் தீ பிடித்து எரிந்துள்ளது. இதில், 9 வார குழந்தை உட்பட 5 பேர் உயரிழந்தனர்.
அத்யான் பர்வஸ் கயானி (9), அமான் பர்வஸ் கயானி (7), மற்றும் இவர்களின் சகோதரியான 9 வார குழந்தை மினாயில் ஆகியோர் இந்த தீ விபத்தில் மரணமடைந்தனர்.
மேலும் இவர்களின் அத்தை அனும் பர்வஸ் (20) மற்றும் பாட்டி சபீனா பேகம் (53) ஆகியோரும் மரணமடைந்தனர். பேகம் முதலில் தீயிலிருந்து தப்பித்ததாகவும், பின்னர் குழந்தைகளை காப்பற்ற சென்று அவரும் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
விசாரணையில், கைப்பேசி சார்ஜரில் தீப்பொறி ஏற்பட்டு பின்னர் பெரிய தீயாக பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது.
9 வார குழந்தை, இரு சிறுவர்கள், ஒரு இளைஞர், ஒரு முதியவர் என மூன்று தலைமுறைகள் இந்த தீ விபத்தில் அழிந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த இறுதிசடங்கில், 3000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment