டெல்லியை சேர்ந்த கவுதம், கடந்த செவ்வாய்கிழமை அன்று மனைவி மஞ்சுவிடம் காலை உணவு கேட்டுள்ளார்.
அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்ததால் சிறிது நேரம் கழித்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக உணவு தரவில்லை என்று கோபத்தில் சமையல் அறைக்கு சென்ற கவுதம் கத்தியை எடுத்து வந்து மஞ்சுவை குத்தி கொன்றுள்ளார்.
மனைவியைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துவிட்டார் என்று நாடகம் ஆட அவரை இழுந்து வந்து முதல் மாடியில் இருந்து கிழே தள்ளிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். |
No comments:
Post a Comment