அமெரிக்காவில் உள்ள ஓவியர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வயிற்றில் ஓவியம் வரையும் புது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பசிபிக் பேஸ் பைண்டர்ஸ் என்று ஓவியர்கள், தற்போது கர்ப்பமாக உள்ள பெண்களின் வயிற்றில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளனர்.
இவர்கள் கடவுள் முகம், இயற்கை காட்சிகள், பறவைகள் என பல ஓவியங்களை வரைந்துள்ளனர். மேலும் வயிற்றில் குழந்தை இருப்பது போல் வரைந்த ஓவியம் கர்ப்பமாக உள்ள பெண்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
இந்த ஓவியத்திற்கு பைண்ட் மற்றும் இதமான பிரஷ்களை பயன்படுத்துகின்றனர். இதில் எளிதாக கழுவவும் முடியும். மாரியா கரே, ஹிலாரி டப், அலசெண்ட்ரா அம்ப்ரொலியோ போன்ற பிரபலங்களும் இந்த ஓவியத்தை அனுபவித்துள்ளனர்.
இந்த ஓவியத்தை வரைய தகுந்த வயிறு அமைப்பு 6 முதல் 8 மாத கர்ப்ப காலங்களை பார்த்து இவர்கள் தெரிவு செய்கின்றனர்.
No comments:
Post a Comment