Saturday, 31 May 2014

வீட்டை விட்டு வெளியேறமாட்டோம்: அச்சத்தில் பெண்கள்




அமெரிக்காவில் பிரபல நாளிதழ் நடத்திய ஆய்வு ஒன்றில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பெரிதும் அஞ்சுவதாக அறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர பயப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் ஆண்களை விட மூன்று மடங்கு பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர பயப்படுகின்றனர் என்றும் பெண்களுக்கு எதிராக கையாளப்படும் வன்முறைகளே அவர்களின் அச்சத்திற்கு வழிவகுக்கின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இளம்பெண்கள் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதால் தனியாக வெளியே செல்ல பயப்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment