பிரான்ஸ் நாட்டில் போட்டி, மன அழுத்தம், மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றால் ஊழியர்கள் கொடூரமான மனக்கோளாறுகளுக்கு ஆளாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் பெமின் கோதபிராய் எனபவர் தொலொஸ் நகரில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது 2 வருட மன துன்புறுத்தலால் இவர் பித்துபிடித்து உள்ளார். மேலும் இவர் இரண்டு ஆண்டுகளில் 66 பவுண்ட்ஸ் எடை குறைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அலுவலகத்தில் மேலதிகாரியின் துன்புறுத்தலாலும், வீட்டில் தொலைபேசி மூலம் வரும் வேலைகளாலும் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் தனது தபால் நிலைய வேலையை விட்டு மனநல மருத்துவர்களால் கண்காணிக்கபட்டு வருகிறார். இதில் அவர் மட்டும் இறையாகவில்லை கடந்த 2008 முதல் 2009 ம் ஆண்டில் மட்டும் 35க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் இது பிரான்ஸில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளிலும் நடப்பதாக தெரிவித்துள்ளது.
இவர்கள் நடத்திய ஆய்வில், 31 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 50 சதவிகித ஊழியர்கள் அலுவலகத்தில் மன உலைச்சளுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment