பிரேசில் நாட்டில் பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரி போன்று இருந்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்தவர் பேபியேனி டி ஜீசஸ் (33), இவர் மந்திரம் தெரிந்த சூனியக்காரி.
இவர் குழந்தைகளை கடத்துகிறார் என இவர் வசிக்கும் பகுதியில் இவர் குறித்து தவறான தகவல்கள் பேசப்பட்டது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று கடந்த வாரம் மே 5ம் திகதி ஒரு கும்பல் இவரை சரமாரியாக தாக்கியதில் பரிதாபமாக இறந்தார்.
ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர் மீது குற்றத்திற்கான முகாந்திரம் இல்லை என தெரிவித்து உள்ளனர்.
பேஸ்புக்கில் ஒருபடம் வெளியிடப்பட்டு இவர் சூனியக்காரி குழந்தைகளை கடத்துபவர் எச்சரிக்கையாக இருங்கள் கூறப்பட்டு இருந்தது.
அந்த படத்தில் உள்ள முகம் இந்த பெண்ணின் உருவத்தை ஒத்து இருந்ததால் இத்தகைய சம்பவம் நடைபெற்று உள்ளது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு தாங்கள் வெளியிட்ட தகவல் காரணம் அல்ல என பேஸ்புக் நிர்வாகம் மறுத்து உள்ளது.
No comments:
Post a Comment