Saturday, 31 May 2014

மப்பில் தள்ளாடிய நபர்: கார் நிறுத்தியதால் நேர்ந்த விபரீதம்



ஜேர்மனியில் குடிபோதையில் கார் ஓட்டிய நபர் திடீரென காரை நிறுத்தியதால், விபத்து ஏற்பட்டு 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் பிராங்ப்பர்ட் நகரில், கடந்த 24ம் திகதி நபர் ஒருவர் (29) குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அவர் கழிப்பறைக்கு செல்வதற்காக திடீரென்று காரை நிறுத்தியதால், அவரது பின்னால் வந்த கார் விபத்துக்குள்ளாகி 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனால் 4 வயது மற்றும் 15 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கபட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து பொலிசார் அந்நபரை சோதித்தபோது, இரத்தத்தில் மதுபான அளவு 1.36 சதவீதம் இருந்ததால், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.

No comments:

Post a Comment