ராஜஸ்தான் மாநிலம், டுங்கர்பூர் மாவட்டத்தின் சக்வாடா பகுடியை சேர்ந்தவர், யஷ்வந்த். பள்ளி ஆசிரியரான இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
தனது தாயார், தம்பி மீது மட்டும் அதிக பாசம் செலுத்தி வருவதாக கருதிய 16 வயது மூத்த மகன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பெற்றெடுத்த தாய் என்றும் கருதாமல் ட்ரிட்டி ஜோஷி(45) என்பவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றான்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட கொலையாளியை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து, அவனிடம் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment