Friday, 29 August 2014

ஒரு ஆபாச இணையதளத்தை பிளாக் செய்தால், மற்றொன்று தொடங்குகிறது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்



ஆபாச இணையதளங்களை பிளாக் செய்ய போராடி வருவதாக கூறியுள்ள மத்திய அரசு ''சுமார் நான்கு கோடி இணையதளங்கள் உள்ளன, நாங்கள் ஒரு இணையதளத்தை பிளாக் செய்தால் மற்றொரு இணையதளம் தொடங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்சனைகள் உள்ளது. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளது. இதனையடுத்து, பிரச்சனை தொடர்பாக் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூரமான சம்பவம் அரங்கேறும் முன் பஸ்சில் இருந்தவர்கள் ஆபாச விடியோவை அவர்களது செல்போனில் பார்த்துள்ளனர். இதனை குறிப்பிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆபாச இணையதளங்களே என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் நடைமுறையில் ஆபாச இணையதளங்களை அரசு அல்லது கோர்ட்டு உத்தரவு இல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக தடுப்பது சாத்தியமில்லை என்று இணைய சேவை வழங்குனர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துவிட்டனர். இணையதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. என்று இணைய சேவை வழங்குனர்கள் தெரிவித்தனர். 

1 comment:

  1. Assalaamualaikum bhai plz. http://karaikudihakkimsait.blogspot.in/2013/04/blog-post_1966.html?m=1 plz to remove comments same Guy

    ReplyDelete