பெங்களூரு : வரதட்சணக் கேட்டு, கருவைக் கலைத்து வீட்டை விட்டு விரட்டிய மாமியாரை, துடைப்பத்தால் அடித்தார், மருமகள். பெங்களூரு, சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்தவர், ரூபா. தாய்மாமன் ஞானேஷ்குமாரை, கடந்த பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வாங்கிய ஞானேஷ்குமார், ராஜாஜி நகர், பாஷ்யம் சர்க்கிளில், துணிக்கடை திறந்தார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை, மீண்டும் வரதட்சணை கேட்டு, தாய் அமராவதியுடன் சேர்ந்து, கொடுமைப்படுத்தினார். மருத்துவமனைக்கு, கட்டாயமாக அழைத்து சென்று, கருச்சிதைவு செய்ய வைத்தார். சில நாட்களிலேயே, மாமியார் அமராவதி, மருமகளை வீட்டை விட்டு துரத்தியடித்தார்.
வேதனையடைந்த ரூபா, மகளிர் சஹாயவாணி என்ற அமைப்பில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், மாமியார் அமராவதி, தன் மூத்த மகன் மஞ்சுநாத் ஆச்சாரின் மனைவி சுருதியையும், இதே போன்று கொடுமை செய்து, வீட்டை விட்டு வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, ரூபாவும், சுருதியும் கூட்டு சேர்ந்தனர். மகளிர் அமைப்பின் உதவியுடன், மாமியார் அமராவதியை, துடைப்பத்தால் அடித்து உதைத்தனர். பின், போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment