Wednesday, 27 August 2014

நீண்ட கால போர் நிறுத்ததிற்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் சம்மதம் மக்கள் கொண்டாட்டம்


காஸா முனையை ஆளுகிற ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஜூலை மாதம் 8-ந் தேதி சண்டை மூண்டது. இந்த சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அந்த சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் அவர்கள் இடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான மறைமுக சமரச பேச்சை எகிப்து முன்னின்று நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தை கடந்த 19-ந் தேதி தோல்வி அடைந்தது. இதை இதை தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்

காஸா முனை பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 2200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர், 11 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். இஸ்ரேல் பக்கம் 64  ராணுவ வீரர்கள் உள்பட 68 பேர் பலியாகி உள்ளனர்.

அமரிகாவின் முழு ஆதரவுடன் எகிப்து தலையீட்டின் பேரில் தற்போது நீண்ட கால போர் நிறுத்த்திற்கு இரு தரப்பினரும் சம்மதித்து உள்ளனர்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் பிக்சாகி கூறும் போது  போர் நிறுத்தம் அறிவிக்க நாங்கள் மிகவும் உறுதுணையுடன் இருந்தோம்.என்று கூறினார்.   

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் டிவியில் தோன்றி  சமாதானத்தை ஏற்று அறிவித்தார்.   

இஸ்ரேல் அரசாங்க செய்தி தொடர்பாளர் மார்க் ரெஜிவ் கூறும் போது இந்த போர் நிறுத்தம் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து காஸா முனையில் மக்கள் வீதிகளில் இறங்கி இதை கொண்டாடி வருகின்றனர். நேற்று அங்கு வெற்றி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த சமாதானத்தை ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் வரவேற்று உள்ளார். 

இதுகுறித்து பான் ந்கீ மூனின் செய்தி தொடரபாளர் கூறும் போது:-

இந்த சமாதான் முயற்சியால் நெருக்கடியின்  வேர்க்காரணங்களை சமாளிக்க முடியாது. ஆனால்  அடுத்த கட்ட வன்முறை நிகழவிடாமல் இது தடுக்கும் என கூறினார்.

No comments:

Post a Comment