மொபைல் போனில் ஒரு நாளைக்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக செலவழிக்கும் குழந்தைகள் பள்ளி தேர்வுகளில் மோசமான முறையிலேயே எழுதுகின்றனர் என்று ஜப்பான் நாட்டு அரசின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
கல்வியில் பாதிப்பு
ஜப்பான் நாட்டின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வில், 14 மற்றும் 15 வயது கொண்ட மாணவ-மாணவிகளில் ஒரு நாளைக்கு 4 மணிநேரம் மொபைல் போனில் செலவிடுபவர்களில் 9ல் ஒருவர் அனைத்து பாடங்களிலும் சராசரியாக 14 சதவீத புள்ளிகள் குறைவாக எடுக்கின்றனர். இது கணித பாடத்தை எடுத்து கொண்டால் 18 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
ஆய்விற்கு உட்பட்ட மேல்நிலை பள்ளி இளநிலை மாணவர்களில் பாதி பேர் வரை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஆவது மொபைல் போன்களில் பேசுவது, இணையதளங்களில் பிரவுசிங் செய்வது, இ-மெயில்கள் அனுப்புவது மற்றும் கணினி விளையாட்டுகளில் ஈடுபடுவது என தங்கள் பொழுதை கழிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
மொபைல் போன் பயன்பாடு
இந்த வயதில் உள்ளவர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்கள் மொபைல் போன் கூட வைத்திருக்கவில்லை. ஸ்மார்ட்போன் உபயோகம் 11 வயது உடையவர்களிடம் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், தொடக்க நிலை பள்ளி படிப்பின் இறுதி ஆண்டில் இருப்பவர்கள் சொந்தமாக மொபைல் போன் வைத்திருப்பது என்பது 54 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களில் 15 சதவீதத்தினர் ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது மொபைல் போன் பயன்பாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.
கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவு கணினி திரையால் ஈர்க்கப்பட்டு பாட புத்தகங்களை தவிர்க்கும் பள்ளி மாணவர்களின் நிலை குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளது. மொபைல் போன்களை மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள கஜுவோ டேகியுச்சி, மொபைல் போன்களை மாணவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்துவதில் உள்ள நம்பிக்கை குறைகிறது என்றும் எனவே, அதன் பயன்பாட்டை குறைக்க பெற்றோர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment