:

-
கேரளாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 418 மது பார்களின் உரிமத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, கேரள குற்ற ஆவணப்பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பு
கேரள மாநிலத்தில் தரம், சுகாதாரம் இல்லை என்று கூறி கடந்த ஏப்ரல் மாதம் முதல் 418 மது பார்களின் உரிமத்தை கேரள அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து 418 பார்களும் மூடப்பட்டன. மேலும், 5 நட்சத்திர ஓட்டல் பார்கள் 20 தவிர 292 பார்களின் உரிமங்களை ரத்து செய்த கேரள அரசு, செப்டம்பர் 12-ந் தேதிக்கு முன்னதாக அவற்றை அடைக்க காலக்கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில் கேரள குற்ற ஆவணப்பிரிவு (கிரைம் ரிக்கார்ட்ஸ் பீரோ) சார்பில் எடுக்கப்பட்ட குற்றங்கள் குறித்த புள்ளிவிவர கணக்கெடுப்பு பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலத்தில் 418 மது பார்கள் அடைக்கப்பட்ட கடந்த 5 மாத காலத்தில் குடிபோதையால் நடைபெறும் கொலை, கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வந்த குற்றங்கள் குறைந்துள்ளன. அதேபோல, தனிநபர் பழிவாங்கும் செயல்கள் உள்பட குற்றங்களின் எண்ணிக்கையும் கடந்த காலங்களை விட குறைந்துள்ளது.
குற்றங்கள் குறைவு
மதுபார்கள் மூடப்பட்டதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையில் குறைந்ததே இதற்கு காரணம். அதே போல் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் வாகன விபத்துக்களும் கணிசமாக குறைந்துள்ளன. மது அருந்திவிட்டு பொது இடங்களில் வேண்டாத பிரச்சினைகளை எழுப்பி, அதன் மூலம் உண்டாகும் அடி, தடி குற்றங்களும் குறைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் மே மாதங்களில் சராசரியாக 1,689 குற்ற வழக்குகள் பதிவாகி வந்தன. இந்தநிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் தனி நபர் குற்றப்பிரிவில் 81 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. அதேபோல ஜூன் மாதத்தில் 85 வழக்குகளும், ஜூலை மாதத்தில் 80 குற்றவழக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த தகவல் கேரள குற்ற ஆவணப்பிரிவு கணக்கெடுப்பு புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment