Wednesday, 27 August 2014

பிற சமுதாய பெண்களை திருமணம் செய்வது தொடர்பான பாரதீய ஜனதா கட்சி எம்.பி. யோகி ஆதித்யாநாத்தின் பேச்சால் புதிய சர்ச்சை

,


பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத், பிற சமுதாயத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்யும்படி தனது ஆதரவாளர்களிடம் நேற்று கூறினார்.  வீடியோவில் பதிவான இந்த காட்சிகள் தொடர்பான விவகாரம் குறித்து நிருபர்கள் இன்று கேட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.

அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் விளக்கம் எதனையும் தர நான் விரும்பவில்லை.  வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு முன்பாக அது குறித்து தீர ஆய்வு செய்ய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து இன்றைய தேதியில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலும் இதனையே குறிப்பிட்டுள்ளார்.

கோரக்பூர் எம்.பி.யான யோகி ஆதித்யாநாத் தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றில் தனது ஆதரவாளர்கள் முன்பாக பேசுகையில், ஒரு சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு அந்த சமுதாயத்தை சேர்ந்த 100 பெண்களை மதம் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

இது போன்ற சர்ச்சையில் சிக்குவது அவருக்கு புதிதல்ல.  பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று தொடர்பாக பேசி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.  கடந்த 2007ம் ஆண்டில், கோரக்பூரில் இன வன்முறையை தூண்டி விட்டதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சூழலில் அவர் இருக்கிறார்.

No comments:

Post a Comment