Tuesday, 26 August 2014

வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிக்கு தடை?



புதுடில்லி: வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஒலிபெருக்கிகளால் அதிக இரைச்சல் ஏற்படுவதோடு, கலவரங்களும் ஏற்படுகின்றன என்று, இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'இந்த வழக்கை விசாரிப்பதற்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுகிறது. எனவே, அது தொடர்பான முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, மனுதாரருக்கு உத்தரவிட்டது. பூங்கா விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான பூங்காக்களில், பொதுமக்களை இலவசமாக அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment