Wednesday, 23 July 2014

குத்துவிட்ட காதலன்: அழகியாக உருவெடுத்த காதலி


பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது காதலரிடம் வாங்கிய அடியால் தற்போது பேரழகியாக உருவெடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் லிங்கான்சையர் நகரை சேர்ந்த க்ரிம்ஸி (19) என்ற பெண் தனது காதலன் கேம்பெல் (22) என்பவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதில் இவர் மூக்கு நொறுங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் க்ரிம்ஸியின் காதல் பிரிந்தாலும், அவர் அழகியாக உருவெடுத்துள்ளார்.
இந்த தாக்குதலில் மூக்கு கடுமையாக பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு மூக்கு மாற்று சிகிச்சை செய்துள்ளனர். இதனை அடுத்து புதுப்பொலிவுடன் உருவெடுத்த க்ரிம்ஸியை மொடல் நிறுவனம் ஒன்று அனுகியுள்ளது.
தற்போது க்ரிம்ஸி அழகு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து க்ரிம்ஸி கூறுகையில், இது எனக்கு உத்வேகம் அளிப்பதாகவும், எனது வாழ்க்கை கதை மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக இதனை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கிரிம்ஸை தாக்கிய அவர் காதலன் கேம்பெல்லுக்கு வெறும் 250 பவுண்ட்ஸ் அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளனர்

No comments:

Post a Comment