
உத்தரபிரதேச மாநிலம் பதோசி மாவட்டத்தில் திலனுகா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுமித். விளையாட சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் அவனை
காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்துக்கு வெளியே ஒரு சிறுவனின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சாமியார் 3 பேர் சிறுவனை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டியது தெரிய வந்தது. கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்காக அவர்கள் நரபலி கொடுத்து உள்ளனர். இது தொடர்பாக சாமியார் உபேந்திரா திவாரி மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment