Wednesday, 23 July 2014

ஐந்து ஆண்டுகளில் 597 வீரர்கள் தற்கொலை


புதுடில்லி: 'கடந்த ஐந்து ஆண்டுகளில், 597 ராணுவ வீரர்கள் தற்கொலை மூலம் தங்கள் உயிர்களை மாய்த்துள்ளனர்' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி எழுத்து மூலமாக அளித்த பதிலில், நேற்று லோக்சபாவில் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: தற்கொலை செய்த வீரர்களில், 498 பேர், ராணுவத்தையும், 83 பேர் விமானப் படையையும், 16 பேர் கடற்படையையும் சேர்ந்தவர்கள். இதில், அதிகபட்சமாக, 2010ல், மட்டும், 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, கடந்த ஐந்தாண்டுகளில், 1,349 ராணுவ அதிகாரிகள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவ்வாறு, அவர் பதில் அளித்துள்ளார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அருண் ஜெட்லி, ''புதிய அரசு மத்தியில் பதவியேற்றதில் இருந்து, இதுவரை, 19 முறை, எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment