
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வைற்ற 3 மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் கொடூரமாக அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடா திம்மபுரத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் இரண்டு நாட்களுக்குப் பிறகு உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியானது. மாணவர்கள் கதறித் துடித்தும் தனது ஆத்திரம் தீரும் வரை ஆசிரியர் இரக்கமின்றி அடித்தார். இந்த வீடியோ பதிவை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கொதித்தெழுந்தனர்.
மாணவர்களின் பெற்றோர்கள் ஆத்திரத்துடன் பள்ளிக்குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாசை அடித்து உதைத்தனர். கண் பார்வைற்ற அவரை நாற்காலி மீது தூக்கி வீசியதுடன், வெளியில் இழுத்து வந்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திக்கு வந்து முதல்வரை மீட்டு கைது செய்தனர். பள்ளி செயலாளர் கே.வி.ராவும் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment