Tuesday, 1 July 2014

நடுவானில் திறந்த விமானத்தின் அவசர வழி கதவு

நடுவானில் திறந்த விமானத்தின் அவசர வழி கதவு - பதற்றத்தில் பயணிகள்
சிகாகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்ட விமானத்தில் சுமார் 101 பயணிகள் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசர வழி பாதைக் கதவு திடீரென திறந்ததால் பயணிகளும், விமான பணியாளர்களும் பதற்றம் அடைந்தனர்.
 
இந்த இக்கட்டான சூழலை சாதூர்யமாக சமாளித்த விமானி, விமானத்தை கான்சாஸில் பத்திரமாக தரை இறக்கினார்.
 
இச்சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த அந்த விமான பயணி ஒருவர், எப்போதும் இல்லாத அளவிற்கு பயம் நிறைந்த விமான பயணம் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment