Monday, 7 July 2014

பஸ்களில் மொபைல்போன் பாடல்களுக்கு போலீஸ் தடை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் பயணத்தின்போது மொபைல் போன்களில் சமுதாய பாடல்களை கேட்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

தற்போது பாடல், சினிமா வசனங்கள், அரசியல் தலைவர்களின் மேற்கோள்கள், சமுதாய தலைவர்களின் வரலாறு, தாங்கள் சார்ந்துள்ள சமுதாய வரலாற்று பாடல்களை ரிங் டோன், மெமரி கார்டில் பதிந்துள்ளனர்.பஸ் பயணத்தின்போது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த பாடல்களை மொபைல்களில் கேட்கும் போது, மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக பயணிகளுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. விரும்பத்தகாத இத்தகைய மோதல்களை தவிர்க்க மொபைல் போன்களில் சமுதாய சார்ந்த பாடல்களை பஸ்சிற்குள் கேட்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

மேலும், இதனை மீறி பாடல்களை கேட்டால் 04567- 232111 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment