Wednesday, 23 July 2014

பள்ளிக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தமிழக அரசு தடை


சென்னை: பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தமிழக பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கு மோட்டார் சைக்கிள்களில் வரக்கூடாது என மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மீறி வாகனங்களை ஓட்டி வரும் மாணவர்களை கண்டிப்பதுடன், அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனக்குறைவுடன் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அந்த பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment