
பாட்னா
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது அதில் வேலை செய்து வந்த 17 வயது பெண். கட்டிட மேல் பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார் விழுந்த இடத்திம் காங்கீரீட் போடுவதற்காக இரும்பு கம்பிகள் வைக்கபட்டு இருந்தன . அதில் விழுந்ததும் 3 கம்பிகள் பெண்ணின் இடுப்பு பகுதியில் குத்தி மறுபுறம் வெளியே வந்தன.
உடனடியா அந்த பெண்ணை பாட்னாவில் உள்ள ரூபன் பாலிபுத்ரா மருத்துவமனையில் சேர்த்தனர்.அதிர்ஷட வசமாக இளம்பெண்ணின் இடுப்பு பகுதியில் குத்திய கம்பிகள் அவளுடைய முக்கிய உறுப்புகளை எதையும் பாதிக்கவில்லை அதனால் அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை. என டாக்டர்கள் கூறினர்.5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டாக்டர்கள் அவர் உடம்பில் உள்ள கம்பிகள் அனைத்தையும் வெட்டி எடுத்தனர்.பின்னர் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்த பெண உடல் நலம் தேறி உள்ளார்.
No comments:
Post a Comment