Thursday, 3 July 2014

33 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள்: ஆய்வில் தகவல்




வாஷிங்டன்,

33 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால  சிகிச்சைகள் தேவையில்லை என்றும் அவர்களுக்கு ஆயுள் காலம் பலமாக இருக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தை சேர்ந்த பல்கலைகழகம் ஒன்று ஆய்வு செய்து இதை தெரிவித்துள்ளது.இந்த , 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தமது இறுதிக் குழந்தையை 33 வயதுக்குப் பின்னர் பிரசவித்த பெண்கள் 95 வயது வரை வாழ்வது  இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், நீண்ட காலம் வாழ்வதற்காக பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட காலம் வாழும்  551 குடும்பங்களை அடிப்படையாக  கொண்டு  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment