
ரமலான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல; முஸ்லிம்கள் ‘ஸக்காத்து’ எனப்படும் தான தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமலான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் துபாய் நகரின் மசூதிகள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்து திரிந்த 54 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை என 65 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறிய போலீசார், இதைப் போன்று பிச்சை எடுக்கும் சாக்கில் சிலர் பணக்காரர்களின் வீடுகளுக்குள் புகுந்து தங்களது ‘கைவரிசையை’ காட்டி விடுகின்றனர். தற்போது பிடிபட்டவர்களில் ஒரு பெண், மற்றொரு வளைகுடா நாட்டில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதானவர் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment