Tuesday, 1 July 2014

மரணத்திற்கு சாலை விபத்துக்கள் முதலிடம்


புதுடில்லி : மனிதர்களின் மரணத்தை விளைவிக்கும் காரணிகளில், சாலை விபத்துக்கள் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற பதிவுகள் கழகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2013ம் ஆண்டில், 4,00,517 பேர் சாலை விபத்துக்களில் பலியாகி உள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும், 1.4 சதவீதம் அதிகம் . இயற்கைக்கு மாறான மரணத்தை ஏற்படுத்துவதில், சாலை விபத்துக்கள் 34.3 சதவீதத்துடன் முதலிடத்திலும், திடீர் மரணங்கள் (7.8 சதவீதம்), நீர்நிலைகளில் மூழ்குதல் (7.5 சதவீதம்), விஷம் குடித்தல் (7.3 சதவீதம்), ரயில் விபத்துக்கள் (7.2 சதவீதம்) மற்றும் தீ விபத்துக்கள் (5.5 சதவீதம்) என உள்ளது. இ்வவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment