
திருப்பூர் : தகவல்களை உடனுக்குடன் பெறும் வகையில், திருப்பூர் பின்னலாடை துறையினர், மொபைல் போன்களில், "வாட்ஸ்-அப்' அப்ளிகேஷனை பயன்படுத்துவதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு, விரைவான தகவல் தொடர்பு அவசியமாகிறது. இ-மெயில் போன்ற அடிப்படை தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படுகிறது. திருப்பூரை பொறுத்தவரை, பின்னலாடை உற்பத்தி பிரதானமாக உள்ளது. வெளிநாடு, வெளிமாநில ஆர்டர் பெறும் இந்நிறுவனங்கள், குறித்த காலத்துக்குள் ஆர்டர் அனுப்ப வேண்டியுள்ளது. இதனால், நூல் கொள்முதலில் துவங்கி, ஆடை உற்பத்தி நிலை குறித்து, இணைய தளம் மூலம் தகவல் பெறுகின்றனர் .ஆர்டர் நிலை குறித்து அறிந்துகொள்ள, தொழிலாளர்களை "ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு அனுப்பி தொடர்ந்து கண்காணிக்கின்றனர். வெளிநாட்டு "பையர்'களிடம் இருந்து, "சாம்பிள் ஆர்டர்' குறித்த "கமெண்ட்'களை பெறுவது என பல்வேறு பயன்பாடுகளுக்கு, இணைய தளங்கள் கைகொடுக்கின்றன.இதுமட்டுமின்றி, ஆடை உற்பத்தியில் ஏற்படும் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள, பேஸ்புக், ஜீ-பிளஸ் போன்ற சமூக வலை தளங்களை அதிகளவில் பயன்படுத்தினர். தகவல்கள் விரைவில் சென்றாலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, வீண் காலதாமதங்கள் ஏற்படுகின்றன.
தற்போது ஸ்மார்ட் போன் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை போன்களில் உள்ள, "வாட்ஸ்-அப்' என்கிற அப்ளிகேஷன், மிக சுலபமாக கையாளும் வகையிலும், உடனடியாக தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த அப்ளிகேஷனில், இணைய தள இணைப்பு பெற்று, கண நேரத்தில், போட்டோ, வீடியோ, குறுஞ்செய்தி, வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். தனித்தனியாக மட்டுமின்றி, அதிகபட்சம் 50 பேர் வரை இணைந்து குழுக்களை ஏற்படுத்தி ஒரே நேரத்தில், பலருக்கு தகவல்களை அனுப்புவது போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன. பெரும்பாலான பின்னலாடை துறையினர், மத்தியில் "ஸ்மாட் போன்' பிரபலமாகியுள்ளது. இந்த போன்களில், "வாட்ஸ்-அப்' அப்ளிகேஷனை "ஆக்டிவேட்' செய்து, ஆடை உற்பத்தி சார்ந்த தகவல்களை பெறுவது, அனுப்புவது போன்ற செயல்பாடுகளை துரிதப்படுத்துகின்றனர். தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொள்ளும் பின்னலாடை துறையினர், நூல், ஆடை உற்பத்தி, சாயமிடுதல் என பல்வேறு நிலைகளில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை கேள்வி, பதிலாக பகிர்ந்துகொள்கின்றனர்.
தங்கள் தொழிலாளர்கள் முறையாக "ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு நேரில் சென்று, ஆர்டர்களை கண்காணித்துள் ளனரா என்பதை, இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்கின்றனர்.
களப்பணிக்கு செல்வோரிடம், அங்கு சென்றதற்கான புகைப்படம், வீடியோக்களாக பதிந்து, அனுப்பச் செய்து, தகவல்களை பெற்று, உறுதிப்படுத்துகின்றனர். பிரச் னைக்குரிய ஆர்டர்கள், பையர்கள், வர்த்தகர்கள் குறித்த தகவல்களை, தங்கள் குழுவினருக்கு தெரிவித்து, உஷார்படுத்தவும் செய்கின்றனர். இதுதவிர, சங்கம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.ஆர்டர் தயாரித்து அனுப்பும் கால அளவு குறைந்து வரும் நிலையில், தகவல் தொடர்பை துரிதப்படுத்தும், இதுபோன்ற இணைய தள கருவிகளின் பயன்பாடும், குறித்த காலத்தில் ஆடை களை உற்பத்தி செய்ய ஏதுவாக அமைவதாக, தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment