
மயிலாடுதுறை தெற்கு அரண்மனை தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு தமிழ்செல்வன், பார்த்தீபன் என்ற மகன்களும், இளமதி, மரகதமணி என்ற மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் பழனிசாமி மகள் இளமதிக்கும் பேரளம் அருகே உள்ள ஆலத்துரை சேர்ந்த சாந்தகுமார் மகன் கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் மனைவியுடன் குடும்பம் நடத்திய கார்த்திகேயன், மனைவி இளமதி கர்ப்பம் ஆனதால் அவரை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு துபாய் சென்று கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அங்கு 1½ ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார்.
நேற்று கார்த்திகேயன் அவரது தந்தை சாந்த குமார், அவரது தம்பி குமரவேல் ஆகியோர் பழனிசாமி வீட்டிற்கு சென்று எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடைபெறுகிறது. எங்களுடன் இளமதியை அனுப்பிவையுங்கள் என்று கூறினர். அப்போது இளமதியை அனுப்ப அவர்கள் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தமிழ்செல்வன், பார்த்தீபன், இளமதி, மரகதமணி மற்றும் அமுதா ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பார்த்தீபனும், இளமதியும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து 5 பேரை வெட்டிய சாந்தகுமார், அவரது மகன்கள் கார்த்திகேயன், குமாரவேல் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment