லண்டனைச் சேர்ந்தவர் லாரா கன்லைப். 23 வயது இளம் பெண்ணான இவர் வீட்டில் ஆசையாக வாஸ்து தங்க மீன்கள் வளர்த்து வந்தார். அத்துடன் ஒரு பூனையும் வளர்த்தார். அந்த பூனைக்கு வயது 4 மாதம் தான் ஆகிறது. மாவ்கிலி என்று பெயரிட்டு பூனையை அழைத்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பூனையானது தனது வாஸ்து மீன்களில் ஒரு தங்க மீனை கடித்து தின்று விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லாரா அந்தப் பூனையை மைக்ரோ வேவ் அவனில் போட்டு பூட்டி சுவிட்சை ஆன் செய்தார். பின்னர் திறந்து விட்டார்.
என்றாலும் சில நொடிகளில் பூனை கருகி விட்டது. உயிருக்கு போராடிய அந்த பூனை சிறிது நேரத்தில் இறந்து விட்டது.
இதையடுத்து லாரா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment