Tuesday, 25 February 2014

முஸ்லிம் மதம் பத்வா'வில் கோர்ட் தலையிடுமா?சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி:'பத்வா' எனப்படும், முஸ்லிம் மதத் தலைவர்களின் உத்தரவில், சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை. எனினும், அந்த உத்தரவுகளால், தனிமனிதர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை பாதுகாக்க, கோர்ட் தலையிடும். எந்தவொரு, பத்வா உத்தரவும், மக்கள் மேல் திணிக்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.'ஷரியத் மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்றவை, நாட்டின், மற்றொரு சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, வழக்கறிஞர், விஸ்வலோச்சன் மாடம் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு, நேற்று, நீதிபதி, சி.கே.பிரசாத் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முஸ்லிம் மதத் தலைவர்கள், பிறப்பிக்கும், பத்வா உத்தரவில், கோர்ட் தலையிடாது. ஆனால், அந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட நபரை பாதுகாக்க, கோர்ட் தலையிடும்.அரசியல், மத ரீதியிலான விவகாரங்களில் தலையிட, கோர்ட் விரும்பவில்லை. ஆனால், பத்வா உத்தரவு, யார் மீதும் திணிக்கப்படக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment