Tuesday, 25 February 2014

வீடியோ கேம் மீது அதீத காதல்! தந்தை கண்டித்ததால் படுகொலை செய்த மகன்


சீனாவில் பள்ளிக்கு செல்லாமல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை கண்டித்த தந்தை கத்தி குத்துக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தென் சீனாவின் ஹீனான் மாகாணத்தில் உள்ள லோடி என்ற நகரத்தில் இணையதள நிலையம் ஒன்று உள்ளது.
14 வயது மாணவன் ஒருவன், பள்ளிக்கு செல்லாமல் குறித்த நிலையத்திற்கு சென்று வீடியோ கேம் விளையாடுவதையே வழக்கமாக கொண்டிருந்தான்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று சிறுவன் மறுபடியும் வீடியோ கேம் விளையாட சென்றுள்ளார்.
இதனையறிந்த தந்தை, இணையத்தள நிலையத்திற்கு சென்று சிறுவனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் லூவை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளான்.
லூவின் மரணத்திற்கு வன்முறை வீடியோக்கள் தான் காரணம் என சிறுவனின் தாயார் ஹீவா மேய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment