இன்றைய சூழலில் பெரும்பாலான விமான பணியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஹாங்காங்கை சேர்ந்த ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹாங்காங் நாட்டை சேர்ந்த சம வாய்ப்பு ஆணையம் என்னும் நிறுவனம், ஹாங்காங் விமான ஊழியர்கள் கூட்டமைப்புடன் இணைந்து சர்வே ஒன்றை நடத்தியது.
9000 பேரிடம் ஆய்வு நடத்தியதில் 392 பேர் முறையான பதிலளித்தனர்.
இந்த ஆய்வின் முடிவில், 86 சதவீத பெண் பணியாளர்களும் 14 சதவீத ஆண் பணியாளர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
மேலும் பயணத்தின் போது உடல் ரீதியாக, தொடுதல்,முத்தம் கொடுத்தல் போன்ற தொந்தரவுளை பணியாளர்கள் அனுபவிக்கின்றனர்.
59 சதவீதத்துக்கும் மேலான துன்புறுத்தல்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வருவதும், ஏனைய 41 சதவீத தொந்தரவுகள் சகபணியாளர்களிடம் இருந்தும் மூத்த அதிகாரிகளிடம் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment