Tuesday, 25 February 2014

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை : உகாண்டாவில் சட்டம்

ஓரினச் சேர்க்கை கடும் குற்றமாகக் கருதப்படும் உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
முதல் முறை பிடிபடும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 14 ஆண்டுகால சிறைத் தண்டனையும், இரண்டாவது முறை பிடிபடும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார்.
இந்த சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்தினால் உகாண்டாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment