Tuesday, 25 February 2014

அதிக அளவு செக்ஸ் உங்கள் அறிவுத்திறனை வளர்க்கிறது ஆய்வில் தகவல்

ங்கள் துணை தற்போது ரொமாண்டிக் மூடு இல்லை என கூறினால். மூளைக்கு செக்ஸ் நல்லது என கூறி புரியவையுங்கள். ஒரு புத்திசாலியின் தந்திரம் போல் தெரிந்தாலும் உண்மையில் காதல் அறிவுத்திறனை அதிகரிக்கிறது என உளவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் விஞ்ஞானிகள் எலிகள் மூலம் நடத்தி ஆய்வில் கண்டறிந்து உள்ளனர் இதற்கு முன்னர் உள்ள ஆய்வுகளில் செக்ஸ் கலோரியை அதிக அளவு இழக்க செய்கிறது. மன அழுத்ததை வெகுவாக குறைக்கிறது என தெரியவந்தது.
சமீபத்தில் செக்ஸ் குறித்து எலிகள் மீது நடத்திய ஆய்வில் ரத்தம் மற்றும் மூளையின் சிலபகுதிகளில் நியூரான் அதிக் அளவு உருவாகிறதுஎன்றும் அது நீண்ட கால நினைவாற்றலை அதிகரித்து உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.  இவ்வாறு உற்பத்தியாகும் நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் அடிப்படை கட்டுமான தொகுதிகள் உருவாக்கும் ஒரு சிறப்பு வகையாக  செல்லாக  இருக்கின்றன.   செக்ஸ் நடவடிக்கைகள் அதிகமாகும் போது  மூளையின் செல்கள் அதிக அள்வு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.   
எலிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்திய பிறகு அவைகளுடைய அறிவுதிறன் வெகுவாக குறைந்து விடுகிறது.  தென் கொரியாவின்  கோன்குக் பல்கழைக்கழகமும் இந்த ஆய்வு குறித்து முடிவுகளை உறுதி செய்து உள்ளது.
கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, செக்ஸ் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது.என கூறுகிறது.செக்ஸ் செயல்பாடுகள்   மூளையின் பின்மேட்டு ஹிப்பாகோம்பல் (hippocampal) மண்டல பகுதியில்  மன அழுத்தம் ஏற்படும்  தீங்கு ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்படுகிறது.என்றும் கூறி உள்ளது.
வயதானவர்கள் செகஸ் செயல்பாடுகள் குறையும் போது  சிக்கலான பல மன அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது என கிளாமர் இதழ் கூறி உள்ளது.

No comments:

Post a Comment