பிரித்தானியாவில் நாடாளுமன்ற பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதால், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரித்தானியாவில் நாடாளுமன்ற எஸ்டேட் பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பிரபுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற பகுதியில் கடந்த மார்ச் 2012ல் இருந்து கடந்தாண்டு டிசம்பர் வரையில் மட்டும் 140 குற்றங்கள் நடந்துள்ளன.
அவற்றில் 3 வழக்குகள் பொதுவானவை, 3 வழக்குகள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சார்ந்தவை, மற்றொரு வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் நடந்த பாலியல் தொடர்பான குற்றம் ஆகும்.
மேலும் நாடாளுமன்றத்தில் பார்வையாளர் நுழைவாயில் பகுதியான கிராம்வெல் கிரீனில், போதை பொருள், கத்திகள், விஷ வாயுக்கள் மற்றும் பிற ஆயுதங்களை பொலிசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனுடன் 10 ஆயிரத்து 200 பவுண்டுகள் மதிப்பிலான லேப்டாப்கள், ஐபேடுகள் மற்றும் ஐபோன்கள் ஆகியவை கொள்ளை போயுள்ளன என்று தகவலறியும் சுதந்திர சட்டம் வழியே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் மக்கள் பிரதிநிதி சபையின் செய்தி தொடர்பாளர், போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதுடன் குற்றங்கள் தொடர்பில் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment