பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆஸ்ரமம் வைத்து நடத்திவருபவர் ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள்.(வயது 70).இவர் தெய்வீக ஒளி விழிப்பு மிஷன் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.இவருக்கு கோடிகணக்கான சொத்துக்கள். உள்ளது இவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இதை டாகடர்களும் உறுதி செய்தனர். இருந்தாலும் அவரது ஆதரவாளர்களும்- சீடர்களும் அவர் இறக்கவில்லை அவர் ஆழ்துக்கத்தில் உள்ளார் என தெரிவித்து கடந்த 6 மாதங்களாக அவரது சடலத்தை புதைக்காமல் ஐஸ் பெட்டியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அவரது சீடர்கள், மருத்துவ ரீதியாக அவர் இறந்து இருக்கலாம் என்றாலும் அவர் ஆன்மிக ரீதியாக உயிருடன் இருக்கிறார். சுய உணர்தல் பாதையில் இருந்து அவர் ஆழ்ந்த தியான நிலைக்கு சென்று உள்ளார். என கூறி வருகின்றனர்.
அவரது ஆதரவாளர்களில் ஒருவர் "இது அசாதாரணம் எதுவும் இல்லை. மருத்துவ அறிவியலால் யோக அறிவியல் போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது.என்று கூறினார்.அவர் இறக்க வில்லை அவர் பரிசுத்தமாக விரைவில் திரும்பி வருவார் என கூறினார். அதுவரை அவரது உடலை பாதுகாப்போம்.
மற்றொருவர் கூறும் போது அவர் விரைவில் திரும்பி வருவதாக உறுதி அளித்து உள்ளார் என்றார்.குருவின் உறவினர்கள் அவருக்கு திருமணமாகி 40 வயதில் மகன் உள்ளார் என கூறுகின்றனர். குருவின் ஆதரவாளர்களும் அவரது சீடர்களும் அவரது சொத்துக்களை கைப்பற்ற இவ்வாறு நாடகமாடுவதாக உறவினர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment