கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, எம்.பி., தபஸ் பால், 'தேவைப்பட்டால், மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க உத்தரவிடுவேன்' என, பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் பேச்சுக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என, திரிணமுல் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், இரண்டு முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், தபஸ் பால், 55,. பெங்காலி மொழி படங்களில் நடித்து வரும் அவர், தற்போதும், எம்.பி.,யாக உள்ளார். கடந்த வாரம், தன் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய தபஸ் பால், 'நம் கட்சிக்காரர்கள் பிற கட்சியினரால் தாக்குதலுக்கு ஆளாவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். தேவைப்பட்டால், மார்க்சிஸ்ட் கட்சி பெண்களை கற்பழிக்க என் ஆதரவாளர்களுக்கு உத்தரவிடுவேன்' என, அவர் பேசியுள்ளார். இந்த காட்சிகளை, அம்மாநில, 'டிவி' ஒன்று நேற்று வெளியிட்டது. இதையடுத்து, அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், 'இந்த விவகாரத்தை, தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, ''தபஸ் பால் எம்.பி., கூறிய கருத்து, அவரின் சொந்த கருத்து; அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர், டெரிக் ஓ பிரையன் எம்.பி., நேற்று கூறினார். நடிகர் தபஸ் பாலின் மகள், சோஹினி பால், பெங்காலி படங்களில் நடித்து வருகிறார்.
No comments:
Post a Comment