பிரித்தானியாவில் கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரை போதை ஊசி போட்டு கொன்ற விலைமாதுவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ஹயேஸ் நகரின் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் போரஸ்ட் கெய்ஸ் (51) என்ற உயர் அதிகாரியுடன் விபச்சார அழகியான டெக்கில் மேன், சாந்தா குருஸ் என்னும் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஆடம்பர படகு ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய இவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது குடிபோதையில் நிலை மறந்து தள்ளாடியபடி அதிகாரி இருந்ததால், விபச்சார அழகி ஹெராயினை ஊசியின் மூலம், அவரது உடலில் செலுத்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் அதிகாரி உடல்நலம் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் திணறி மரணம் அடைந்துள்ளார்.
இதன்பின் அதிகாரியின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விபச்சார அழகி தப்பி ஓடியுள்ளார்.
மறுநாள் இறந்துகிடந்த கூகுள் அதிகாரியின் உடலை பார்த்த ஹொட்டல் நிர்வாகிகள் காவல் துறையினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் இவர்களது செயல்கள் அனைத்தும் அந்த ஹொட்டல் அறையில் உள்ள ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது.
இதனைதொடர்ந்து டெக்கில் மேனை தேடிய பொலிசார், பின்பு அவரை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment