Thursday, 3 July 2014

பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை கைது


கோல்கட்டா: வறுமை காரணமாக, தன் ஒன்றரை மாதக் குழந்தையை, தரையில் அடித்துக் கொன்ற தந்தையை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியின், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத் தலைநகர் கோல்கட்டாவை சேர்ந்தவர், அமர் விஸ்வாஸ், 28. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், வேலையில்லாமல் வறுமையில் வாடிய விஸ்வாஸ், தன் ஒன்றரை மாத பெண் குழந்தையுடன், தாராதாலா போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்திற்கு வந்தார். அங்கு குழந்தையை தரையில் அடித்துக் கொன்றார்.குழந்தையை தூக்கியபடி கணவர் சென்றதைக் கண்டு, அவரை பின்தொடர்ந்து வந்த அவரது மனைவி, விஸ்வாஸ், குழந்தையை தரையில் அடித்துக் கொன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.உடனே, அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில், தன் கணவர் மீது புகார் அளித்தார்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விஸ்வாசை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment