இரவு விடுதிகளுக்கு ஆபாசமாக ஆடையணிந்து பெண்கள் செல்வது தவறானது என்று கூறி தாக்குதலில் ஈடுபடும் ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முதாலிக்கின் கருத்தை ஆமோதிப்பது போல் கோவா மாநில மந்திரி ஒருவரும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
அரைகுறை உடையுடன் பெண்கள் இரவு விடுதிக்கு செல்வது நமது சமுதாயத்திற்கு அழகல்ல. அவ்வாறு செல்வது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள கோவா மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும் மகாராஷ்டிராவதி கோமந்தக் கட்சியின் முக்கிய தலைவருமான சுதின் தவாலிகர், இதை அனுமதித்தால் கோவா மாநிலத்தின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், முதாலிக்கின் கருத்து தவறானதல்ல. அவர் எந்த மதத்திற்கு எதிராகவும் கருத்து கூறவில்லை. ஆனால் அதே சமயம் தனது சொந்த மதத்தை பற்றி பேச ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்றார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் இரவு நேர விடுதிக்கு சென்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர் முதாலிக் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment