Thursday, 3 July 2014

முதியவர் தலையில் மந்திரவாதி அடித்த ஆணி


திருநெல்வேலி, : பேயை ஓட்டுவதாக கூறி முதியவரின் தலையில் அடிக்கப்பட்ட 3 இன்ச் ஆணியை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர். திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் சொக்கலிங்கம் 60. இவருக்கு சில ஆண்டுகளாக மனநிலையும் உடல்நிலை யும் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர். இருப்பினும் பில்லி, சூனியம் காரணமாக பேய் பிடித்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச்சென்றார்களாம்.அவர், முதியவர் சொக்கலிங்கம் தலையில், மூன்று இன்ச் அளவுள்ள ஆணியை உச்சந்தலையில் அடித்து அனுப்பிவிட்டனர். ஆணி அறையப்பட்டது தலையின் வலது மூளை பகுதி என்பதால் சொக்கலிங்கத்திற்கு இடது கை, கால் செயல் இழந்தன.எனவே, வேறு வழியின்றி அவரை ஒரு மாதத்திற்கு முன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரேயில் அவரது தலையில் ஆணி அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.மருத்துவமனை நரம்பியல் அறுவைசிகிச்சை துறையினர் சொக்கலிங்கத்திற்கு ஆப்பரேஷன் மேற்கொண்டு ஆணியை அகற்றினர். தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ளதோடு இடது கை, காலும் செயல்பட துவங்கி விட்டது. சொக்கலிங்கத்தின் மனைவி புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தலையில் ஆணி அடித்த மந்திரவாதி குறித்தும் விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment